Saturday, November 3, 2012

வாடை காதலி

பாலையென இருந்த என் வாழ்வில்
மழை வாசம் நீயடி
வாடை காற்றின் குளிர்ச்சி
உன் செவ்விதழ் முத்தமடி

மழை நனைத்த நிலமாய் நீ அணைக்க
என் தேகம் சிலிர்க்காதோ
மேகம் கண்ட மயிலாய் உன் முகம் பார்க்க
என் மனம் ஆடாதோ

பூப்பற்றிய மழை துளி போல்
உன் முகம் பற்றி என் நெஞ்சில் புதைப்பேனே
நீர் காணா விளைநிலம் போல்
நீ இல்லா நேரம் ஏங்கி தவிப்பேனே

மின்னல் ஒளி உன் சிரிப்பில்
என் காலம் உறைந்திடக் கூடாதோ 
கார்மேக கூந்தல் அதில்
நான் தொலைந்திடக் கூடாதோ

பருவம் முடிந்த மழையென
மறைந்து போவாயோ
மழை தந்த வெள்ளம் போலே
உன் நினைவுகள் மட்டும் விட்டு செல்வாயோ

என்னை பிடித்த உனக்கு என் கரம் பிடிக்க
சிரமம் தான் எத்துனை
வேண்டி நின்ற எனக்கு உன்னை சேர
அந்த கடவுள் தான் வழித்துணை

உயிரே திரும்பி வந்து விடு

பார்த்தும் பாராமல் போகும் எனதுயிரே கொஞ்சம் நில்லடி
பேசிடவே வந்தேன், நான் சொல்வதை சற்றே கேளடி
என் மேல் பொய் கோபம் கொள்வதும் ஏனோ டி
எனக்கே உரியவள் என காட்டிட தானோடி...

உன்னை நினையாமல் இருந்தேன் என கொள்வதேனோடி
உனக்கெனவே வாழ்ந்திடும் போது நினைத்திடல் வேண்டுமோடி...
உன்னோடு போடும் சண்டையது கானல் நீர் போல் பொய்யானதடி
உன் மேல் கொண்ட காதல் அது போல் அல்ல மெய்யானதடி...

பேசாது நீயும் சென்றால் ஏற்பட்ட ஊடல் அது தீருமோடி 
கொடும் ஆயுதம் அதுவன்றோ என்னை கொன்றே தீருமடி...
வாழ்வென்பது ஒரு முறை தான், மறந்தாயோடி 
காத்திருத்தல் வீணே உடனே வந்து சேரடி...

ஊடல் இது விட்டு செல்லும் பரிசை அறிவாயோடி 
பேரின்ப உள்ளம் ஆசையில் பொங்கி ததும்புமடி...
பொங்கியது எனது உள்ளம் அணைத்திட வாராயோடி 
தாங்கிட எனது உயிரை, இரு கரம் தருவாயோடி...  

சும்மா

என்னையே நான் பார்த்ததும்
நானே நம்பவில்லை
அடையாள அட்டையில் எனது படம்…! 

தூங்கியவர்களை எழுப்பியதற்கு தண்டனை
தலையில் அடி வாங்கியது மேஜை கடிகாரம்

கொடுக்கப்பட்ட வேலை முடிந்ததோ இல்லையோ
அதை நண்பர்களிடம் சொல்லிக்கொள்ள
சென்று விட்டார் நம்மவர்
தேநீர் விடுமுறைக்கு….!

உழைத்து களைத்தோரின் சொர்க்கம்
உழைக்காமல் கிடப்போரின் வேலை
நல்ல உறக்கம்…. 

கொல்ல வந்தவன் சாம்பலானான்
ஏற்றி வைத்த கொசு வர்த்தி…. 

வாழ்க்கை

இன்பம் அது கொட்டி இருக்கு
வாரிக் கொள்ள எவருமுண்டோ…!

முகம் அது சிரித்து இருக்க
துன்பம் ஏதும் நெருங்குவதுண்டோ..!

கண்களில்  நீர் மல்க நின்றால்
ஏதேனும் சீராகிவிடுமோ…!அப்படியானால் எஞ்சிய சிறிய நிலமும்
பாதி ஆகி விடாதோ…!

துன்பம் ஏதும் இல்லா மனிதரை
இவ்வுலகில் காண்பது அரிதன்றோ…! 

உப்பில்லா பண்டம் சுவைப்பதுண்டோ
துன்பம் இல்லா வாழ்வு தழைப்பதுண்டோ…?

துயரம்

வருத்தம் என்பது இப்படியும் வந்திடுமோ
பிரிவு என்பது இப்படியும் நேர்ந்திடுமோ

புது அணியில் சேரும் போது உடன் வந்தாயே 

உடன் பிறவா சகோதரியென நீ இருந்தாயே

இதுவரை யாரும் எனை உண்ண சொல்லி வற்புறுத்தியதும் இல்லை
உனைப்போல யாரும் எனை எரிச்சலூட்டியதும் இல்லை     

பிரிவென இதை காட்டிலும் அந்த நையாண்டிகள் தேவலையே
இப்போது தனிமையில் இருப்பதற்கு அப்போது உன் பேச்சுக்கள் தேவலையே   

அவ்வப்போது என் சாடுதல்கள்(bulbs)  ஒலிபரப்ப நீயும் இங்கு இல்லையே
நீ மட்டும் வாய் திறந்தால் ஒலிபரப்பிதான் ஒன்றும் தேவை இல்லையே  

மீண்டும் உன்னை சந்திக்க கூடிடுமோ
அதற்கிடையில் உள்ள காலம்தான் விரைந்திடுமோ

எப்பொழுதும் நீ

நிலா பொழுது வானம்
மழை பொழுது மேகம்
தோள் தந்திட நானும்
அதன் மேல் சாய்ந்திட நீயும்
கரம் கோர்த்து நாமும்
நடை போடும் நேரம்
உறைந்திட கூடாதோ காலம்…

காலை பொழுது மலரும்
பூவைப்போல உன் முகம்
கூர்ந்த சிறு புருவம்
மலர்ந்த சில பருவும்
கண்கள் மனம் கவரும்
கண்ணம் கொள்ளை கொள்ளும்
மறையாதே உன் அழகுருவம்…

மாலை பொழுது நேரும்
தனிமை அது சோகம்
உனை கண்ட நேரம்
அது அகன்று போகும்
அணைத்திட உன் கரம்
மாறாத உன் மனம்
எப்பொழுதும் வேண்டும்…

அன்பு மகள்

வான் கொண்ட விண்மீன் தரை தட்டி விழுந்தது ஏனோ
என் வீட்டில் ராணியாய் அவள் தவழ்ந்திட தானோ…

மழை அது வாசலில் வெள்ளமென திரண்டது ஏனோ
என் குழந்தை அவள் சிரிப்பதை கேட்டிடதானோ…

இன்பத் தென்றல் என் இல்லத்திலே வீசுவதேனோ
என் தாயவள் மீண்டும் பிறந்ததாலோ…

என் மனம் அது துள்ளி குதிப்பது ஏனோ
நிலவு மகள் நெஞ்சிலே உதைப்பதாலோ…

பால் வண்ண மேனி எழில் கொண்டு துயில்வதை அறிவீரோ
கருவிழி இரண்டால் பேசிடும் பதுமையை காண்பீரோ…

தேவதை அவளை வாழ்த்திட என் இல்லம் வருவீரோ
மகள் அவள் வாழ்வில் சிறக்க வரம் ஏதும் தருவீரோ…